கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி(திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது:
பார்வை திறன் குறைபாடுகளுடைய மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற அந்த நிலை இல்லாமல், தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது எப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் வேலையை வழங்கினாரோ, அது போல் வேலையினை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களுக்கெல்லாம் தகுதி தேர்வு வைப்பதன் மூலமாக பல பேருக்கு வேலை கிடைக்காத நிலை இருக்கிறது. ஆகவே எப்படி சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுத்தோமோ, அந்த மாதிரி வேலை கொடுத்தால் எல்லா பள்ளிக்கூடத்துக்கும் ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். அதை மாற்றுவதற்கு அந்த முறையை அரசு கொண்டு வருமா?
அதுவும் அந்த பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
செங்கோட்டையன்: ஆசிரியர்கள் சில இடங்களில் இல்லை என்று உறுப்பினர் கூறியுள்ளார். பல மாவட்டங்களில் அந்த குறைபாடுகள் எங்களுக்கு தெரியும். அதற்காக ரூ.7500 சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமாக அங்கே ஆசிரியர்களை நிரப்பலாம். அதன் பிறகு ஆசிரியர்களை தேர்வு செய்த பிறகு படிப்படியாக அந்த பணியிடங்களை நிரப்பலாம் என்று அரசு ஆணையிட்டது.
அதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. ஆகவே அந்த வழக்கு முடிந்தவுடன் ரூ.7500 சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் எந்த இடத்திலும் இல்லையென்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக்கி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது
No comments:
Post a Comment
Please Comment