*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
💢தேர்வு நெருங்க, நெருங்க மாணவர்களுக்கு பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இந்த பயத்தைப் போக்கி தேர்வில் எளிமையாக வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
💢திட்டமிடல் :
தேர்வு தேதிகள் தெரிந்தவுடன் மாணவ, மாணவியர்கள் ஒரு அட்டவணையை போட்டு எந்தெந்தப் பாடத்திற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக்கொள்வது நல்லது.
💢உங்களுக்கு எத்தனை பாடங்கள் இருக்கின்றனவோ அந்த பாடங்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அதற்கேற்றார்போல் காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
இந்த நாளில் இந்த பாடத்தை படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே படித்துவிடுங்கள்.
💢நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். படிப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து படியுங்கள். உங்களது கவனத்தை சிதறச் செய்யும் இடங்களில் படிப்பதை தவிர்த்து விடுங்கள்.
💢எந்த பாடத்தை படித்தாலும் அதில் முக்கியமான கருத்துக்களை குறித்துக்கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும். பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்த்து விடுங்கள்.
💢இடைவெளி விட்டு படியுங்கள். அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் நல்லது.
தேர்வு சமயத்தில்.... கவனிக்க வேண்டியவை :
பொதுவாக மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கு படிக்கும்போது செய்யக்கூடிய தவறு என்னவென்றால் இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பது. ஏனெனில், இரவில் கண் விழித்து படிப்பதன் மூலம் உடல்சோர்வு ஏற்படும்.
💢அதுமட்டுமின்றி இரவு உண்ணும் உணவு செரிமானம் அடையாமல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மறுநாள் காலையில் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகும் நிலை ஏற்படும்.
💢எனவே, தேர்வு சமயத்தில் போதிய அளவு தூக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு சமயத்தில் உண்ணக்கூடிய உணவு வகையிலும் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை, எண்ணெய் பதார்த்தங்களை, மசாலா வகை உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
தன்னம்பிக்கை வேண்டும் :
💢 தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்கள்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனெனில் நேர்மறை எண்ணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக அமையும்.
💢 உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். கேள்விக்கான விடைகளை தெளிவாகவும், அழகாகவும் எழுதுவது அவசியம்.
💢தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராகுவதை பாதிக்கும். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிடுங்கள்.
No comments:
Post a Comment
Please Comment