தேசிய அளவிலான போட்டிகளில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரி, பல்கலையில் படிக்கும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், உதவித்தொகை வழங்கப்படும்.இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:2018- 19ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவ, மாணவியர், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் மார்ச், 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1.7.2017முதல் 30.6.2018 நாட்களில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்றவர்களாக இருக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு, எஸ்.ஜி.எப்.ஏ., எஸ்.டி.ஏ.டி., இந்திய பல்கலை சார்பில், நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையும்; கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் வரையும், உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment