தேர்வில் வெற்றி பெற சிரமப் பட வேண்டியதில்லை,கவனத்துடன் படித்தாலே போதும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்வில் வெற்றி பெற சிரமப் பட வேண்டியதில்லை,கவனத்துடன் படித்தாலே போதும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


புதுக்கோட்டை,பிப்.23: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் செந்தூரன் கல்விக் குழுமத்தின் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி மாணவ,மாணவிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.



விழாவினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: கல்லானது சிலையாகாது.உளியைக் கொண்டு செதுக்கினால் தான் அழகான சிலை கிடைக்கும்.அது போல மாணவர்களாகிய நீங்கள்  படித்தால் தான் முன்னேறலாம்.இங்கு வந்திருக்கும் மாணவர்களாகிய நீங்கள்  பொதுத்தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள்.உங்களது தரத்தை சோதிப்பதற்கே தேர்வு.தேர்வில் வெற்றி பெற சிரமப் பட வேண்டியதில்லை.கவனத்துடன் படித்தாலே போதும்.



மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை காதிலே வாங்கி நெஞ்சிலே நிறுத்த வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள் உங்களை செதுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.பெற்றோர்கள் ,உற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.மேலும் தேர்வின் பொது வினாத்தாளை சரியாக படித்து சரியான விடை எழுதி அதிக மதிப்பெண் எடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் செந்தூரான் கல்வி குழும எஸ்.கார்த்திக் வரவேற்றுப் பேசினார்.செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏவிஎம் .செல்வராஜ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் விஎம்.கண்ணன் ,செந்தூரான் கல்வி குழுமத்தை சேர்ந்த ஆர்.வயிரவன்,எஸ்.நடராஜன்,தியாகராஜன்,ஏவிஎம்.ராமையா,கே.முத்துராமன்,எம்.பாண்டிகிருஷ்ணன்,செந்தூரான் பாலிடெக்னிக  கல்லூரி நிறுவன முதல்வர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் க.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எம்.மாரிமுத்து,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,விஆர்.ஜெயராமன்,  கி.வேலுச்சாமி,சி.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.




உளவியல் குறித்து எம்.பாலசுப்பிரமணியன்,நினைவாற்றல் குறித்து ஆர்ஆர்.கணேசன்,தமிழ் பாடம் குறித்து த.கிருஷ்ணவேணி,ஆங்கில பாடம் குறித்து,  டி.லாரன்ஸ் அலெக்ஸ்சாண்டர்,கணித பாடம் குறித்து ஆர்.முருகன்,அறிவியல் பாடம் குறித்து வளர்மதி,சமூக அறிவியல் பாடம் குறித்து  விக்டோரியா ஆகியோர் மாணவர்களிடம் தேர்வை எதிர்கொள்வது குறித்த தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்கள்..


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்ட  பொருளாளர் தென்னரசு நன்றி கூறினார்.


கருத்தரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பயிலும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்புச் செயலாளர் சுரேஷ்,மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் செந்தூரான் கல்வி குழுமத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Please Comment