குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...!

ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வழிமுறைகளை கையாண்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும். 

எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது. உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும். வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்குப் போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாகச் செயல்படத் துணை செய்யும். சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாகச் செயல்படத் துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஞாபக சக்திக்குக் காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்குக் கொண்டு வந்து விடும். 



உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதாகக் கருதி, உணவைக் குறைத்தால் அது மூளை இயக்கத்தைத் தடை செய்து ஞாபகசக்திக் குறைவை ஏற்படுத்தலாம். ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

No comments:

Post a Comment

Please Comment