டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் ஜுனியர் இன்ஜினியர் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் சென்ட்ரல் வாட்டர் கமிஷன், மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ், சென்ட்ரல்
வாட்டர் & பவர் ரிசர்ச் ஸ்டேசன் இது போன்ற 9 மத்தியரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்குதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பணி: 
1. ஜுனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்)
2. ஜுனியர் இன்ஜினியர் (சிவில்)
3. ஜுனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)
4. ஜுனியர் இன்ஜினியர் (குவாண்டிடி சர்வேயிங் & கான்ட்ராக்ட்ஸ்)

முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நாள்: 01.02.2019 முதல் 25.02.2019 
ஆன்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 27.02.2019, மாலை 05.00 மணி 
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 28.02.2019, மாலை 05.00 மணி 
முதற்கட்ட கம்யூட்டர் வழித்தேர்வு (Paper - I) நடைபெறும் நாள்: 23.09.2019 முதல் 27.09.2019 
இரண்டாம் கட்ட(Paper - II) தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019

தேர்வுக்கட்டண விவரம்: 
செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம்: ரூ. 100 
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, PWD, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை: 
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் (SBI Challan) தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

சம்பளம்: 
மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

வயது வரம்பு: (01.08.2019க்குள்) 
1. சென்ட்ரல் வாட்டர் கமிஷன் (CWC) மற்றும் சென்ட்ரல் பப்ளிக் வெர்க்ஸ் டிபார்ட்மெண்ட் (CPWD) போன்ற
துறைகளுக்கு - அதிகபட்சமாக 32 வயது இருக்க வேண்டும்.
2. டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட் மற்றும் மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் போன்ற துறைகளுக்கு -
அதிகபட்சமாக 27 வயது இருக்க வேண்டும்.
3. மற்ற 5 துறைகளுக்கும் - அதிகபட்சமாக 30 வயது இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்: 
1. ஜுனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்) என்ற பணிக்கு, பி.இ - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 3 - வருட டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல்வேண்டும்.
2. ஜுனியர் இன்ஜினியர் (சிவில்) என்ற பணிக்கு, பி.இ - சிவில் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 3 - வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. ஜுனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) என்ற பணிக்கு, பி.இ - எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) 3 - வருட டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல்வேண்டும்.
4. ஜுனியர் இன்ஜினியர் (குவாண்டிடி சர்வேயிங் & கான்ட்ராக்ட்ஸ்) என்ற பணிக்கு, 3 - வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பயின்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் சர்வேயர்ஸ் மூலம் நடத்தப்படும் கட்டிடவியல் மற்றும் குவாண்டிடி சர்வேயிங் என்ற இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: 
1. முதலில் SSC - யின் (https://ssc.nic.in/) இணையத்திற்கு சென்று நிரந்தர பதிவு முறையில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
2. சிறிது நேரத்தில் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும், மெயில் ஐடி-க்கும் Username & Password வரும்.
3. பிறகு https://ssc.nic.in/ - என்ற இணையத்தில் சென்று உங்களுக்கான Username & Password - ஐ தெளிவாக கொடுத்து login செய்து, apply - ஐ கிளிக் செய்து மீதமுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழு தகவல் பெற,
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_jemec_01022019.pdf - என்ற இணையத்தில் சென்று அறியலாம். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment