sbi saving account :
குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தனி மனித நிதியம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எஸ்பிஐ வங்கி 18 வயதிற்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்காக பெஹ்லா கதாம் மற்றும் பெஹ்லி உதான் ஆகிய இரண்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
எஸ்பிஐ வங்கியின் பெஹ்லா கதாம் திட்டத்தின் கீழ் 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் தனிநபராகச் சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும். இதுவே பெஹ்லி உதான் திட்டம் கீழ் 10 வயது நிரம்பியவர்கள் மட்டுமே சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த இரண்டு சேமிப்புத் திட்டங்கள் கீழ் முதலீடு செய்யும் சிறுவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதாவது ஒரு ரூபாய் கூட வங்கி கணக்கில் வைக்காமல் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
பெஹ்லா கதாம் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இந்தத் திட்டம் கீழ் சேமிப்பு கணக்குத் தொடங்கலாம் என்றாலும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் உடன் இணைந்து ஜாயிண்ட் கணக்காக மட்டுமே தொடங்க முடியும்.
பெஹ்லி உதான் இந்தத் திட்டத்தின் கீழ் 10 வயது நிரம்பிய சிறுவர்களால் தங்களது பெயரினிலேயே எஸ்பிஐ சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.
பெஹ்லா கதாம் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது சிறுவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்தும் கணக்கை நிர்வகிக்கலாம். அல்லது பெற்றோர்களால் சிறுவர்களின் அனுமதி இல்லாமல் கணக்கினை நிர்வகிக்க முடியும். பெஹ்லி உதான்: 18 வயது நிரம்பாதவர்களே தங்களது சேமிப்புக் கணக்கினை நிர்வகிக்கலாம்
பெஹ்லா கதாம் சேமிப்பு திட்டத்தில் சிறுவரின் புகைப்படம் பொதியப்பட்ட ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
பெஹ்லி உதான் திட்டத்தில் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும். ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்! எந்தெந்த வங்கியில் தெரியுமா?
சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கப்படும் அதே வட்டி விகிதம் இந்த இரண்டு கணக்குகளும் வழங்கப்படும். நாமினேஷ்ன் வசதியும் உண்டு. டிமாட் டிராப்ட்டும் பெற முடியும்.
No comments:
Post a Comment
Please Comment