குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்!' பெற்றோருக்கு கூடுதல் டி.ஜி.பி., அறிவுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்!' பெற்றோருக்கு கூடுதல் டி.ஜி.பி., அறிவுறுத்தல்

அனுப்பர்பாளையம்:'உங்கள் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்,' என, பள்ளி விழாவில், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.திருப்பூர், 4, செட்டிபாளையத்தில் உள்ள கே.ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலை பள்ளியின், 10ம் ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் ரமேஷ் வரவேற்றார். 

செயலாளர் குமரவேல், முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் யாமினி, ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:பெற்றோர், ஆசிரியர்களை மாணவர்கள் நேசிக்க வேண்டும். குழந்தைகளை கண்டிக்ககூடாது. சிரிக்க வைத்து பார்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பதை விட அந்த பாடத்தை பற்றி புலன் விசாரணை செய்ய வேண்டும். 

குழந்தைகளிடம் படி படி என்றால் அலர்ஜி ஏற்படுகிறது.விளையாடும்படி கூறினால் மகிழ்ச்சி அடைகின்றனர். விளையாட்டுடன் படிப்பை ஊக்க படுத்த வேண்டும். குழந்தைகளை படிப்பு விஷயத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.மதிப்பெண் குறைவாக எடுத்தால் கண்டிப்பதை விடுத்து, அடுத்த முறை அதிக மார்க்க எடுக்க வேண்டும் என அவர்களை ஊக்க படுத்த வேண்டும். குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். 

அப்போதுதான் உற்சாகத்துடன் படிப்பார்கள். அவர்களிடம் உள்ள திறமையை, ஊக்குவித்து வெளியே கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், மக்கள் ஜனாதிபதி கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சரத்வெல்த் கேப்பிட்டல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆறுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment