அண்ணா பல்கலைக்கழக தேர்வு விதிகளில் புதிய மாற்றம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்ணா பல்கலைக்கழக தேர்வு விதிகளில் புதிய மாற்றம்

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


தனியார் பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வு விதி முறைகளை, அண்ணா பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.



2017-18-ம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரி களில் சேர்ந்த மாணவர்களுக்கு புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி யது. அந்த விதிமுறைகளின்படி, முதல் பருவத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஒரு மாணவர் தோல்வியடைந்தால், அந்த பாடத்துக்கான தேர்வை அவர் 3-வது பருவத்தில் மட்டும்தான் எழுத முடியும். அடுத்த பருவத்தில் அந்த பாடத் தேர்வை எழுத முடியாது. இதனால், 8 பருவத் தேர்வுகளையும், குறிப்பிட்ட 4 ஆண்டுகளுக்குள் முடிக்க இயலாத நிலையை எடுத்துக்கூறி, அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில், திருத்தப்பட்ட தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.


மாணவர்கள் எனவே கோரி யபடி, ஒரு பருவத் தேர்வில் தோல்வி அடையும் பாடத்தை உடனடியாக அடுத்த பருவத்தில் எழுதிக் கொள்ளலாம்.


மேலும், முதல் பருவத் தேர்வில் தோல்வி அடையும் பாடத்தை, அதிகபட்சமாக அடுத்த மூன்று பருவத் தேர்வுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால், 5-வது பருவ வகுப்புக்கு செல்ல முடியாது.

நான்காவது பருவத் தேர்வுக் குள், முதல் பருவத் தேர்வில் தோல்வியடைந்த பாடங்களை எழுதி தேர்ச்சி பெறவிட்டால், அந்த மாணவர், மீண்டும் முதல் பருவ வகுப்புக்கு சென்று படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு பருவத் தேர்வுக்கு 75% வருகைப் பதிவு வேண்டும். விபத்து, மருத்துவக் காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 65 சதவீதம் வருகைப் பதிவு போதுமானது.

இந்த புதிய நடைமுறை, 2017-18, 2018-19-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும். அதன்படி, கடந்த இரு ஆண்டுகளில் சேர்ந்த மாண வர்கள், தாங்கள் தோல்வியடைந்த பாடங்களை 7 வது பருவத் தேர்வுக் குள் தேர்ச்சி பெற வேண்டும். 2019-20 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த புதிய நடைமுறை குறித்து ஒவ்வொரு கல்லூரியும் கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment