நம் வீட்டில் உள்ள பெரியவர்கள், பிள்ளைகளிடம், வாரத்திற்கு ஒரு முறை, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
வாரத்தில் ஆறு நாட்களும், நம் உடல் வெளியே உள்ள வெயில் மற்றும் துாசு பட்டு, அசுத்தமாகி இருக்கும். என்ன தான் தினசரி வெறும் தண்ணீரில் குளித்தாலும், அந்த அழுக்குகள் முழுமையாக நீங்காது. மேலும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும், உட்கார்ந்தே வேலை செய்வார்கள்.
அந்த சமயங்களில், அவர்களது உடலில், பல இடங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. எந்த ஒரு நோயின் துவக்கமே இது தான். ரத்த ஓட்டம் சீராக இல்லாத இடத்தில் தான் வலி உண்டாகும். அந்த உறுப்புகள் சரி வர இயங்காமல் போகும்.
இதன் ஒட்டு மொத்த வெளிப்பாடு தான் கிட்னியின் செயல்பாடுகள். மனிதனுக்கு, மூளையும், கிட்னியும் பழுதாகி விட்டால், அதன் பிறகு, அவன் வாழும் காலம் நரகமாகத் தான் இருக்கும்.
அதனால், வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணையை உடலில் ஊற வைத்து, பின், கை கால், மற்றும், நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும், அழுத்தி தேய்க்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது, ரத்த ஓட்டம் தடைபட்டிருந்த பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் நீவப்படும் போது, ரத்த ஓட்டம் சீராகிறது. உடலில் உள்ள உஷ்ணம் எல்லாம் இந்த எண்ணையினால் குளிர்ச்சி அடைகிறது. அதனால், கிட்னியின் செயல்பாடும், தங்கு தடையில்லாமல் இருக்கிறது.
எண்ணைய் உடலில் தடவப் பட்டிருக்கும் போது, வெளியில் உள்ள துாசு உடலின் உள்ளே போகாது. எனவே, உடலும் சுத்தமாகும். ஒரு மணி நேரம் வரை, எண்ணையை உடலில் ஊற வைத்து, தலைக்கு அரப்பு அல்லது சீயக்காய் பொடியைக் கொண்டு தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அரப்பு மிகச் சிறந்த கிருமி நாசினி. சரும ரோகினி.
எண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்ததும், மீண்டும் தலையிலோ, கை கால்களிலோ, எண்ணெயைத் தேய்க்க கூடாது.
அந்த சமயத்தில், வேர்வைச் சுரப்பிகள் சிறப்பாக வேலை பார்க்கத் துவங்கும். அப்போது எண்ணெய் தேய்த்தால், வியர்வைச் சுரப்பிகளின் பாதை அடைக்கப்பட்டு விடும்.
No comments:
Post a Comment
Please Comment