குழந்தைகளுக்கு நீதி போதனை போதிப்பது மிகவும் அவசியம் என்றார் தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் 45 ஆம் ஆண்டு விழாவில் அவர் பேசியது:
சமூகம் எங்கே போகிறது; மானுடம் எங்கே செல்கிறது என்பது குறித்து சமூக அக்கறையுடன் சிந்திக்க வேண்டும். இச்சமூகத்தைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். திருக்குறள் என்பது எல்லா எல்லைகளையும் கடந்து பார்க்கிற மனிதப் பார்வையைக் கொண்டது.
உரிய கருவியைக் கொண்டு தகுந்த காரியத்தை செய்தால் வெற்றி பெறலாம் என்கிறார் வள்ளுவர். அதாவது எங்கே உயர்வான இடத்தில் இருந்தாலும், சரியான கருவியைக் கொண்டு செயலாற்றினால் வெற்றி கிடைக்கும். திருக்குறள் ஒட்டுமொத்த உலக அங்கீகாரம் பெற்றது. இதுதான் திருக்குறளின் தனித்தன்மை. அதனால்தான் திருக்குறள் காலம் கடந்து நிற்கிறது. ஒரு அரசு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை வள்ளுவர் கூறியுள்ளார். ஒரு அரசன் நேர மேலாண்மை, நிர்வாகம், படை வலிமை, ஆட்சி உள்ளிட்டவற்றை எப்படியெல்லாம் நிர்வகிக்க வேண்டும் என்பதை கூறி இருக்கிறார்.
இன்றும், நாளையும் நிகழும் நிகழ்வுகளுக்கு வள்ளுவர் விடை கூறியுள்ளார்.
இளம் குற்றவாளிகள் உருவாகும்விதம் அதிர்ச்சி அளிக்கிறது. சிறுவர்கள் சிறார் சிறைக்குச் செல்கின்றனர்.
அவர்களுக்குச் சமூகச் சிந்தனை, நீதி போதனை போதிக்காததே இதற்குக் காரணம். எனவே குழந்தைகளுக்கு நீதி போதனை போதிப்பது மிகவும் அவசியமானது. இதுதொடர்பாக நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் முன் வந்து குழந்தைகளுக்கு நீதி போதனையைப் போதித்தால், அவர்கள் மனிதர்களாக வருவர் என்றார் பொன்னம்பல அடிகளா
No comments:
Post a Comment
Please Comment