இப்போது நவீன தொழில்நுட்பத்தின் யுகமாக இருந்து வருகிறது. மனிதர்களை அடுத்து தற்போது மாடு இனப்பெருக்கத்திற்க்காக டேட்டிங் ஆஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்போதைய காலகட்டத்தில் இணையதளத்தில் கிடைக்காத விஷயங்கள் இல்லை. நல்லதோ, கேட்டதோ எல்லாமே ஒரே இடத்தில் கிடைத்து விடுகின்றன. அவ்வாறு இன்றைய இளம்தலைமுறையினர் ஒருவருக்கொருவர் நட்புடன் பழக மொபைல் போனில் ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டன. இந்த ஆஃப் மூலம் பெண்கள், ஆண்கள் தங்களுக்கு பிடித்தவருடன் பேசி பழக முடியும்.
WATCH VIDEO
மொபைல் போன் எண்களை பரிமாறிக்கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு எல்லையே கிடையாது .
இந்த தருணத்தில் மனிதர்களை அடுத்து இப்போது மாடுகளுக்கும் டேட்டிங் ஆஃப்பை அறிமுகம் செய்துள்ளனர். இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் நிறுவனம் ஒன்று டேடிங் ஆஃப்பான டிண்டர் போன்று டூடர் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூடர் செயலி மாடு இனப்பெருக்கத்திற்கான ஒரு செயலியாகும்.
இந்தச் செயலி மூலமாகப் பசு மற்றும் காளை மாடு உரிமையாளர்கள் எளிமையாக இனப்பெருக்கத்திற்கான ஜோடியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று சொல் கின்றனர். அவ்வாறு டூடர் ஆஃப் மூலமாக இனப்பெருக்கத்திற்கான மாடுகளைத் தேடும் போது இணை மாட்டின் புகைப்படம், வயது, இருப்பிடம் போன்ற முழு விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment