அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு, நவம்பர், டிசம்பரில் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டன.
விடை திருத்தம் முடிந்து, நேற்று முன்தினம், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தங்களின் பதிவு எண்களை உள்ளீடு செய்து பார்த்தால், பெரும்பாலானவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இது குறித்து, மாணவர்கள் விசாரித்த போது, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்தது.
இன்ஜி., படிப்பில் மாணவர்கள் சேர்ந்ததும், அவர்களின் சான்றிதழ்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சரிபார்க்கும்.பின், மாணவர் சார்பில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தியதும், அந்த மாணவருக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கும்.ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்த்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை. சில மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தும், அதற்கான கட்டணத்தை, கல்லுாரிகள் தரப்பிலிருந்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு செலுத்தாமல், பாக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.எனவே, இந்த பிரச்னை உள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
Please Comment