நீங்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டிய காப்பீடு பாலிசிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீங்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டிய காப்பீடு பாலிசிகள்

ஒவ்வொருவரும் போதிய காப்பீடு பாதுகாப்பு பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவர் பெற வேண்டிய காப்பீடு அளவுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. ஆயுள் காப்பீடு தவிர மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவையும் அவசியம். அந்த வகையில் ஒருவருக்கு தவறாமல் பெற்றிருக்க வேண்டிய பாலிசிகளை பார்க்கலாம்:




ஆயுள் காப்பீடுநிதி திட்டமிடலில் முதலில் வலியுறுத்தப்படுவது ஆயுள் காப்பீடு தான். பொதுவாக ஒருவரது ஆண்டு வருமானத்தில் பத்து மடங்கு அளவுக்கு காப்பீடு பாதுகாப்பு பெறுவது ஏற்றது என, பரிந்துரைக்கப்படுகிறது. முதலீடு அம்சம் இல்லாமல், பாதுகாப்பு மட்டும் அளிக்கும், 'டெர்ம்' பாலிசியை நாடுவது சரியாக இருக்கும்.மருத்துவ காப்பீடுஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து, மருத்துவக் காப்பீடும் வலியுறுத்தப்படுகிறது. ஒருவர் தனது தேவைக்கு ஏற்ப போதுமான மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.





 குடும்பத்திற்கான புளோட்டர் பாலிசியும் அவசியம். ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் பாலிசி அளிக்கப்பட்டாலும், தேவைக்கேற்ப தனியே பெற்றிருப்பது நல்லது.'சைல்டு பிளான்'குழந்தைகளுடன் குடும்பம் பெரிதாகும் போது, சைல்டு இன்சூரன்ஸ் பிளானை பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும். இந்த திட்டங்கள், குழந்தைகளின் உயர் கல்வி செலவுக்காக திட்டமிட உதவுகின்றன. உயர் கல்வி செலவு அதிகரித்து வரும் நிலையில், இது மிகவும் அவசியமானதாகிறது.'பென்ஷன்' திட்டங்கள்ஓய்வு கால திட்டமிடலை பொருத்தவரை, முன்கூட்டியே திட்டமிடுவது பொருத்தமானது. காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களை, இதற்காக பரிசீலிக்கலாம். 





இவை ஓய்வு காலத்தில் சீரான வருமானம் பெற வழி செய்கின்றன. எதிர்கால தேவைக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.வீடு காப்பீடுவீடு மற்றும் அதில் உள்ள மதிப்பு மிக்க பொருட்களுக்கு, 'ஹோம் இன்சூரன்ஸ்' எனப்படும், 'வீடு காப்பீடு பாதுகாப்பு' அளிக்கிறது. சொந்த வீட்டினர் பொருத்தமான வீடு காப்பீடு பெற்றிருந்தால், தீ விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம். வாடகை வீட்டினரும் உடமைகளை காக்கலாம்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment