பல்லடம்:'மாணவர்களின் தேடுதல்கள் தவறாக இருக்க கூடாது' என, பல்லடம் விழிப்புணர்வு கூட்டத்தில், நீதிபதி கருத்து தெரிவித்தார்.பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில், சட்ட விழிப்புணர்வு கூட்டம், 'ப்ளூ பேர்டு' பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.விழாவுக்கு தலைமை வகித்த, நீதிபதி ராஜ மகேஷ் பேசியதாவது: இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால், மாணவர்கள் இன்டர்நெட், மொபைல் போன் என மூழ்கியுள்ளனர்.
குழந்தைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பது, பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும்.எந்த வசதியுமே இல்லாத அன்றைய கால கட்டத்திலும், மாணவர்கள் ஒழுக்கத்துடன் படித்து வாழ்க்கையில் முன்னேறினர். தவறான தேடுதலாலும், வளர்ப்பு முறை சரியில்லாததாலும், மாணவர்கள் பாதை மாறி செல்கின்றனர்.எது வாழ்க்கைக்கு உதவாதோ, அதில்தான் ஈடுபாடு அதிகரிக்க செய்கிறது. வயதுக்கு ஏற்ற செயல்பாடுகளை மட்டுமே செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தடம் மாறி செல்லும் மாணவர்களின் இழப்பு, அவர்களின் குடும்பத்தையே பாதிக்கிறது.பள்ளி கல்லுாரி வாழ்க்கை என்பது, படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கிறது. இவ்வாறு, நீதிபதி பேசினார்.வக்கீல்கள் ஈஸ்வரமூர்த்தி, மார்ட்டின், ராஜமாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Please Comment