'சமூக விதிமுறைகளை மீறும் எந்த விதமான செயல்களையும் , பதிவுகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்' என்று டிக் டோக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. | # TikTok | # TikTokTamil
தமிழில் வெளியான டிக்டோக் நிறுவனத்தின் அறிக்கை: டிக்டோக் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம்
எங்களுடைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் நலனும் மிக முக்கியம் என்பதால் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.
அதனால் எந்த ஒரு தனி நபருக்கு எதிராகவும் அல்லது அவர்களை காயப்படுத்தும் வகையில் எங்களது சமூக விதிமுறைகளை மீறும் எந்தவிதமான செயல்களையும் பதிவுகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்
விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த பதிவை நீக்குவது அல்லது தேவைப்பட்டால் அவர்களது கணக்கை முடக்குவது அல்லது வரம்புகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டிக்டோக் செயலி அறிக்கை வெளியிட்டுள்ளது
தமிழக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது டிக்டோக் என்றும் ப்ளூவேல் கேம் தடை செய்யப்பட்டதை போல தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிமுன் அன்சாரி கேள்விக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment