புள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., -- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்தில், கோல்கட்டாவில் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு, சென்னை மற்றும், பெங்களூரில் கல்வி மையங்கள் உள்ளன.இங்கு, 14 வகையான புள்ளியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், மூன்று ஆண்டுக்கான கணிதம் மற்றும் புள்ளியியல் பட்டப் படிப்புகள், கோல்கட்டா மற்றும் பெங்களூரு மையங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. சென்னை மையத்தில், முதுநிலை டிப்ளமா படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதப்பாடம் மற்றும் ஆங்கிலம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.புள்ளியியல் கல்வி நிறுவனத்தின், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, மே, 12ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, www.isical.ac.in என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. மார்ச், 12க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
Please Comment