அரசு பள்ளி அறிவியல் கண்காட்சியில் சோலார் மின்சாரத்தில் செல்போனுக்கு சார்ஜ் : மாணவர்கள் அசத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளி அறிவியல் கண்காட்சியில் சோலார் மின்சாரத்தில் செல்போனுக்கு சார்ஜ் : மாணவர்கள் அசத்தல்

💢ராணிப்பேட்டை: அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்து மாணவர்கள் அசத்தினர். 




💢பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கண்காட்சி நிறைவுபெற்றது. 




💢பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உதவித் தலைமை ஆசிரியர் தேன்மொழி, பொறுப்பாசிரியர்கள் சுமதி, ரமணிபாய் முன்னிலை வகித்தனர். 



 💢இதில் அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு ரசித்தனர். 




💢கண்காட்சியில் 8ம் வகுப்பு மாணவர்கள் ஜித்தேஷ், கபிலன், செந்தில்நாதன் ஆகியோர் சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் எடுத்து மின்விளக்குகளை எரிய வைத்தும், செல்போன்களுக்கு சார்ஜ் செய்து காட்டி அசத்தினர். முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



💢🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸




No comments:

Post a Comment

Please Comment