வங்கிப்பணிகளில் கிளார்க் வேலைக்கு கடும் போட்டி இன்ஜினியர்களுக்கு அதிக கிராக்கி : தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வங்கிப்பணிகளில் கிளார்க் வேலைக்கு கடும் போட்டி இன்ஜினியர்களுக்கு அதிக கிராக்கி : தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வரவேற்பு

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


வங்கிப்பணிகளில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிளர்க் பணியில் கூட, இன்ஜினியரிங், எம்பிஏ படித்தவர்கள் அதிகம் சேர்ந்து வருகின்றனர். தொழில்நுட்ப கல்வி, நிர்வாக படிப்புகளுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. ஆனால் அவர்கள் அந்தந்த துறைகளில்தான் வேலை வாய்ப்பு தேடி வந்தனர். 






ஆனால், பெரும்பாலான தொழில்துறைகள் நலிவடைந்துள்ள நிலையில், நிரந்தர வேலை, நிறைவான சம்பளம் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் அரசு வேலைக்கு போட்டி அதிகரித்துள்ளது. 10 அல்லது பிளஸ் 2 படித்தாலே சேரக்கூடிய அரசு வேலைக்கு இன்ஜினியர்களும் விண்ணப்பிக்கின்றனர். 



உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2 ஆண்டில் கிளர்க் பணிக்கு 28 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த வங்கி காலி பணியிடங்களில் 25 சதவீதம் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. 2018 நிதியாண்டில் இருந்து இதுவரை 12,000 காலி இடங்களை நிரப்ப 10,000 பேரை மட்டுமே எடுத்துள்ளது. 



ஆனால், கிளார்க் பணிக்கான இதில் 8,000 பேர் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்தவர்கள். இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், கிளர்க் பணிக்கு சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எம்பிஏ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள்தான். இது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் துறை தேர்வுகள் எழுதி அதிகாரிகளாக பதவி உயர்வு பெறவும் வாய்ப்புகள் உள்ளன.






அதேநேரத்தில், எதிர்காலத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்துவதற்கு இவர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். இதனால் நிர்வாக பணிகளும் மிக எளிதாகிவிடும். 2018ம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு அந்தந்த ஆண்டு ஓய்வு பெறுபவர்களில் 75 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட இருக்கிறது. இதன்படி 8,000 கிளர்க்குகள் மற்றும் 2,000 அதிகாரிகள் உட்பட 10,000 பேர் மட்டுமே நிரப்பப்படுவார்கள். அதிகபட்சமாக 2020ம் ஆண்டில்தான் 12,500 பேர் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் அதிகம் சேர்வதால், இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது 43 ஆக குறைந்துள்ளது.




முன்பு சராசரி வயது 48 ஆக இருந்தது. வங்கி கிளைகள் தேவை குறைந்து வரும் நிலையில், புதிய தொழில்நுட்பம் நோக்கிய பயணத்துக்கு தொழில்நுட்ப கல்வியில் சிறந்த இளைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கடன் ஆலோசனை, சொத்து நிர்வாகம், ஆய்வுகள் உள்ளிட்ட மேலாண்மைகளில் இவர்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment