வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்

வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறியவும் புகார் தெரிவிக்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 





அனைத்து மையங்களுக்கும் ஒரே மாதிரியாக '1950' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் பதிவு படிவத்தின் நிலை, புகைப்பட வாக்காளர் அட்டை, ஓட்டுச் சாவடி, வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் குறித்த விபரங்களை அந்த எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். தங்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். மாவட்ட தொடர்பு மையத்தில் இருப்போர் தங்கள் மாவட்டம் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பர்.





மாநில தொடர்பு மையம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் செயல்படுகிறது. இதற்கு 1800 4252 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் வாக்காளர்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment