மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷரிப் கான் (வயது43). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனித்தேர்வராக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி 51.20 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
தற்போது இவர், இன்று தொடங்க உள்ள 12-ம் வகுப்பு தேர்வை எழுதுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் சிறிய வயதில் பெரிய படிப்புகளை படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் வறுமை காரணமாக 8-ம் வகுப்பிற்கு பிறகு என்னால் படிப்பை தொடர முடியவில்லை. தனது குடும்பத்தை காப்பாற்ற படிப்பை விட்டு விட்டு வேலைக்கு வந்துவிட்டேன். இந்தநிலையில் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தை கண்டு குடும்பத்தினரும், நண்பர்களும் படிக்க உற்சாகப்படுத்தினார்கள்.
அதனால் தான் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடிவு செய்தேன்.
தனியார் டியூசனுக்கு செல்லும் அளவிற்கு வசதியில்லாததால் கல்லூரியில் படிக்கும் ஷரிப் கானின் மகளே அவருக்கு பாடங்களை கற்று கொடுத்துள்ளார். ஷரிப் கானின் இளைய மகள் ஆயிஷாவும் தந்தையுடன் சேர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment