சென்னை: டிக்டோக் செயலி மூலம் ஆபாச நடனம், அத்துமீறல்கள், தனிநபர் தாக்குதல்கள் என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், சமூக விதிமுறைகளை மீறுவோரின் 'டிக்டோக்' கணக்குகள் முடக்கப்படும் என அந்தநிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செயலியில் குறுசெய்தியை அனுப்பியுள்ளது.
டிக்டோக் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளதாவது: மொபைல் செயலிகளை பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய திறமையையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம்.
அதனால் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவோ அல்லது அவர்களை காயப்படுத்தும் வகையிலோ, எங்களது சமூக விதிமுறைகளை மீறும் எந்தவிதமான செயல்களையும், பதிவுகளையும் பொறுத்துக்கொள்ளமாட்டோம். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த பதிவை நீக்குவது அல்லது தேவைப்பட்டால் அவர்களது கணக்குகளை முடக்குவது அல்லது வரம்புகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment