புதுக்கோட்டை,பிப்.15: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது.மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே போட்டித் தேர்வுக்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்த உத்தர விட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இக்கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, டிஇஇடி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குரிய புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா விடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பணிகள் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதுடன் அனைத்து போட்டித் தேர்வு களுக்குரிய புத்தகங்கள், கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவை அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர் வி.ஏ.ஓ, ஆசிரியர் தேர்வுகளில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இதுபோன்ற தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வு குறித்து உரிய விழிப்
புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
Please Comment