சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரசுப் பள்ளி மாணவர் சாதனை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரசுப் பள்ளி மாணவர் சாதனை!


சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்திருக்கிறார். மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கும் மாணவர் தேர்வாகியுள்ளார்.








நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஸ்வரன், அறிவியல் மீது அலாதி பிரியம் கொண்டவர். அந்த அறிவியல் அறிவுப் பசிக்கு வடிவம் கொடுத்த மாணவர் விக்னேஸ்வரன், சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டியை கண்டுபிடித்துள்ளார்.

 மூன்று மாத கடுமையான உழைப்புக்குப் பின்னர், சோலார் சைக்கிளை உருவாக்கியதாக மாணவர் விக்னேஸ்வரன் கூறுகிறார். சோலார் சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கு நேராது என்று தெரிவிக்கிறார் மாணவர் விக்னேஸ்வரன்,
ஆசிரியர்களும், பெற்றோரும் தம்மை ஊக்கப்படுத்தியதாகவும் மாணவர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சோலார் சைக்கிளை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், சாதனை படிக்கும் மாணவரின் கண்டுபிடிப்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to void(0)your group🔸

No comments:

Post a Comment

Please Comment