முன்னாள் படை வீரர் விபரம் ஆன்லைனில் பதிய ஏற்பாடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முன்னாள் படை வீரர் விபரம் ஆன்லைனில் பதிய ஏற்பாடு

ஈரோடு: இந்திய ராணுவ அமைச்சகத்தால், 2019ம் ஆண்டு,'YEAR OF NOK' என, முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கான ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது.

 இதை தொடர்ந்து, டில்லி தலைமை அலுவலகம் மூலம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களின் நலன் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படவுள்ளது. 

இதன்படி போர் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர், முன்னாள் படைவீரர், அவர் சார்ந்தோர் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாகிறது. விபரங்கள் பதிவு செய்ய ஏதுவாக, மதுக்கரை அலுவலகத்தில் இருந்து படைப்பிரிவு அலுவலர்கள், ஈரோடு மாவட்டத்துக்கு, வரும், ??ம் தேதி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், அன்று காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்ட அரங்கிற்கு வரவேண்டும். அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓய்வூதிய அனுமதி ஆணை, முன்னாள் படைவீரர் இறப்பு சான்று, இ.சி.எச்.எஸ்., அட்டை, பான் அட்டை நகல்களை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment