*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.டி.,- எம்.எஸ்., எம்.டி.எஸ். போன்ற மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் மார்ச் முதல் வாரத்தில் சென்டாக் விண்ணப்பம் பெற திட்டமிட்டுள்ளது. இதற்கான கோப்பு தயாரிப்பு பணிகளை சென்டாக் வேகப்படுத்தியுள்ளது.எம்.பி.பி.எஸ்., படிப் பாக இருந்தாலும், மருத்துவ மேற்படிப்பாக இருந்தாலும் 'நீட்' நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியலைபுதுச்சேரி மாநில அரசால் கடைசி வரை போராடியே பெற வேண்டியுள்ளது.
இது சென்டாக் கவுன் சிலிங்கில் குழப்பத்தையும், வீணான காலதாமதத்தையும் ஏற்படுத்துகிறது.இந்தாண்டும் அதே நிலை நீடித்து வருகிறது. மார்ச் இரண்டாவது வாரத்திற்குள் மருத்துவ மேற்படிப்பிற்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்.ஆனால், மத்திய அரசினை புதுச்சேரி அரசு அணுகியும் இதுவரைமருத்துவ மேற்படிப்பிற்கான 'நீட்' தேர்ச்சி பட்டியல் கிடைக்கவில்லை.
முதுநிலை மருத்துவ படிப்புகளில் கவுன்சிலிங்கில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, மத்திய அரசை அணுகி உடனடியாக 'நீட்' தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற அழுத்தம் கொடுக்க வேண்டும்.முதுநிலை மருத்துவ மாணவர்களின் 'நீட்' தேர்வு தேர்ச்சி பட்டியலை சென்டாக் வெப்சைட்டில் வெளியிட்டு தரவரிசை பட்டியலையும் இறுதி செய்ய வேண்டும். இது மாணவர்கள் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்ய உதவும்.இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான கட்டணத்தை விரைந்து அறிவிக்க வேண்டும். இது பணத்தை புரட்ட ஏழை பெற்றோர்களுக்கு உதவும்.மருத்துவ மேற்படிப்பினை பொருத்தவரை அந்த இடங்கள் புதுச்சேரிக்கு கிடைப்பதில்லை.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிட்டன. இதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களை அழைத்து பேசி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை பெற்றால் புதுச்சேரி மாணவர்களுக்கும் இங்கேயே படிக்க வாய்ப்பு கிடைக்கும்.இதுபோன்ற கோரிக்கைகள் மீது அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே எவ்வித குழப்பமும் இல்லாமல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பொது கவுன்சிலிங் நடக்கும்.
No comments:
Post a Comment
Please Comment