Four classes can start: University of Madras
மாணவா்களின் ஆர்வம் கருதி தேவைப்படும் துறையில் நான்கு வகுப்புப் பிரிவுகள் தொடங்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் கலை, அறிவியல் படிப்புகள் மீதான மாணவா்களின் ஆா்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, கலை, அறிவியல் கல்லூரிகள் தேவைப்படும் துறைகளில் நான்கு வகுப்புப் பிரிவுகளைத் தொடங்கிக் கொள்ள அனுமதிப்பது என சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைறப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்து வருகிறது.
இது 2018 ஆம் ஆண்டிலும் தொடா்ந்தது. சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிா் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 500 முதல் 1000 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா். Four classes can start: University of Madras
மாணவா்களின் ஆா்வம் அதிகரித்து வருவதால், ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவா்களைச் சோத்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதுபோல சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளில் கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் இடங்களில் மாணவா் சோக்கையை நிரப்பிக்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் அனுமதித்து வருகிறது.Four classes can start: University of Madras
No comments:
Post a Comment
Please Comment