'பட்டதாரிகள் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும்''Graduates Should Say Thank You Parents'
முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்கள் பெற்றோருக்கு தான் முதலில் நன்றி செலுத்த வேண்டும் என, காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு கூறினார்.மதுராந்தகம், மோச்சேரியில், அகோபில மடத்தால் நிர்வகிக்கப்படும் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிஉள்ளது. இக்கல்லுாரியில், 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
வாழ்க்கையை தெளிவாகக் காண கல்வி எனும் கண்ணாடி அவசியம். இந்தப் பகுதியில், பெரும்பாலான மாணவர்கள், அவர்கள் தலைமுறையில் முதல் பட்டதாரிகளாக உருவெடுத்துள்ளனர்.தங்கள் வறுமையைப் பொருட்படுத்தாமல், உங்களைப் படிக்க வைத்த பெற்றோருக்குத்தான் நீங்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
வாழ்க்கை, எதிர்காலம் பற்றிய தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையும், லட்சியமும் இருந்தால் நீங்கள் உயர்ந்த நிலையை அடையலாம்.இவ்வாறு அவர்பேசினார். கல்லுாரியின் செயலர் சீனிவாசன், இயக்குனர் கோபாலன், முதல்வர் சுபத்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Please Comment