How to Active New SBI Debit Card via Net Banking:
எந்த வங்கியில் கணக்கு புதிதாக தொடங்கினாலும், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம், டெபிட் கார்டு கொடுப்பது வழக்கம்.
அதிலும், டிஜிட்டல் இந்தியா என்ற புதிய திட்டம் வழக்கத்திற்கு வந்த பிறகு, பலரும் பெரும்பாலான கடைகளில் தங்களின் டெபிட், கிரெடிட் அல்லது ஏதேனும் ஒரு ஏடிஎம் அட்டையை தான் பயன்படுத்துகிறார்கள்.
Activate ATM, debit card through SBI net banking : நெட் பேங்கிங் மூலம் ஏடிஎம் கார்ட் ஆக்டிவேட் செய்யும் முறை
புதிதாக வங்கி கணக்கு தொடங்கினால், அருகில் உள்ள ஏடிஎம் செண்டர் அல்லது வங்கி கிளைக்கு சென்று தான் அந்த அட்டையின் பயன்பாட்டை கொண்டுவர முடியும்.
ஆனால் எஸ்.பி.ஐ வங்கியில் இணையத்தளத்திலேயே புதிய ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை தொடங்க முடியும்.
நெட் பேங்கிங் மூலம் எளிய முறையில் ஏடிஎம் கார்டு ஆக்டிவேட் செய்யலாம்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணையத்தளத்திற்கு செல்லவும். பின்னர் அதில் நெட் பேங்கிங் ஆப்ஷனை தேர்வு செய்து உங்களின் கணக்கு விவரத்தை பதிவிடவும்.
உங்கள் கணக்கு பக்கம் திறந்த பிறகு அதில் "இ- சேவைகள்" என்ற ஆப்ஷனில், "ஏடிஎம் அட்டை சேவைகள்" என்பதை கிளிக் செய்யவும்.
இந்த ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு, பல ஆப்ஷன்கள் உங்களுக்கு தோன்றும். அதில், "ஏடிஎம் கார்ட் சர்வீஸ்" என்பதை தேர்வு செய்யவும்.
உங்கள் வங்கி கணக்கினை தேர்வு செய்யவும். ஒரு வேளை உங்களுக்கு ஒரே ஒரு கணக்கு தான் இருந்தால், அதுவே தானாக தேர்வு செய்துக் கொள்ளும்.
16 ஏடிஎம் கார்டு எண்களை இரண்டு இடங்களில் பதிவிட வேண்டியது அவசியம்.
16 எண்களையும் சரியாக பதிவிட்டப் பிறகு, "ஆக்டிவேட்" என்பதை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் உங்களின் ஏடிஎம் கார்டு ஆக்டிவேட் செய்யப்படும். இதன் மூலம் அருகே உள்ள ஏடிஎம் செண்டர்களுக்கோ அல்லது வங்கிக் கிளைக்கோ அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
எஸ்.பி.ஐ அறிமுகம் செய்யும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்கள்🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment