அறிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்துThere is no connection between the knowledge and the score: the former Judge of the High Court
அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் கூட்டஅரங்கில் நேற்று கருத்தரங்கை நடத்தின.
தமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கத்தின் செயலாளர் என்.ஞானகுரு வரவேற்புரையாற்றினார். தலைவர் டாக்டர் சி.எஸ்.
ரெக்ஸ் சற்குணம் தலைமையுரை யாற்றினார்.
சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், ‘பொது சுகாதாரமும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி, ‘மருத்துவக் கல்வியும் தேசிய மருத்துவ ஆணையமும்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் பேசியதாவது:
மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவுக்கும், தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை.
பள்ளியில் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இன்று சமூகத்தில் பெரிய அளவில் உள்ளனர். தேர்வில் கொடுக்கும் மதிப்பெண்ணை அளவுகோலாகஎடுத்துக்கொள்ள கூடாது.
300 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருந்தவர்கள்தான், இன்று அதிக அளவில் கல்விக்கூடங்களில் படிக்கின்றனர்.
பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.30 ஆண்டுகளில் நீட் தேர்வு கொண்டு சென்றுவிடும்.
தற்போது மருத்துவக் கல்விக்கு கொண்டு வந்துள்ள நீட், இன்னும் கொஞ்சம் நாளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் வந்துவிடும். அதன்பின் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மற்றும் எல்கேஜி வகுப்புக்குக்கூட நீட் தேர்வு வரக்கூடிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்
No comments:
Post a Comment
Please Comment