10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு The 10th class exam is completed today
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பள்ளி மாணவர்கள், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். www.thulirkalvi.com
தனித் தேர்வர்களில் 12 ஆயிரத்து 395 பேர் மாணவியர், 25 ஆயிரத்து 777 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். மார்ச் 14ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
Please Comment