பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி!

🔴பொதுத்தேர்வையொட்டி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும் நிறுத்தி அவர்களை ஏற்றி செல்லவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். 







 🔴தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு மையத்தை பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 




🔴அப்போது பேசிய அவர், " சேலம் மாவட்டத்தில் 40, 068 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதாகவும், தேர்வு பணிக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 






 🔴மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க 80க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் மற்றும் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு மையங்களை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதுடன், 




🔴அத்துமீறி நுழையும் அந்நியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். மாணவ -மாணவிகள் ஷூ, பெல்ட், மொபைல்போன், எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,




🔴பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும், நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்குதெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment