ஜிப்மரில் முதுநிலை மருத்துவ படிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜிப்மரில் முதுநிலை மருத்துவ படிப்பு

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்* 



ஜிப்மரில் முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்.டி. மற்றும் எம்.எஸ்., சேர்க்கை நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று துவங்கியது.ஜிப்மரில், வரும் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. மற்றும் எம்.எஸ்., சேர்க்கை நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் நேற்று துவங்கியது. 




ஏப்ரல் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் நுழைவுத் தேர்வு மே 19ம் தேதி நடக்கிறது. முதல்கட்ட கவுன்சிலில் ஜூன் 12ம் தேதி நடத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நுழைவு தேர்வுக்கான உத்தேச பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 



அதன்படி, எம்.பி.பி.எஸ். படிப்பு நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வரும் 6ம் தேதி துவங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 12. ஆன்லைன் நுழைவு தேர்வு ஜூன் 2ம் தேதி நடக்கவுள்ளதாகவும், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 26ம் தேதி துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுபோல், பி.எஸ்சி. நர்சிங், பிசியோதெரபி, எம்.எஸ்சி. நர்சிங், முதுநிலை பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 18ம் தேதி துவங்கி மே 24ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான நுழைவு தேர்வு ஜூன் 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு www.jipmer.puducherry.gov.in/www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment