பான் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா? - இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கு! Link your PAN card with Aadhar card - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பான் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா? - இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கு! Link your PAN card with Aadhar card

பான் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா? - இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கு! Link your PAN card with Aadhar card



பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31 வருவதற்கு இன்னும் மூன்று நாள்கள்தான் உள்ளன. அதன்பின்னர் பான் கார்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். அதில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை விளக்கியுள்ளார்கள். இதற்கு முன்பு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2018 என்றிருந்தது. 







பின்னர் காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டது. அடுத்த ஏப்ரல் மாதம் முதல் பான் கார்டு செல்லாது என்றால் அதைப் பயன்படுத்தவே முடியாதா, அதனை வங்கிகளிலோ வருமான வரித்துறையிலோ காட்டினால் ஏற்க மாட்டார்களா, அந்த பான் கார்டு எண் பயன்படுத்த இயலாததாகிவிடுமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்ததால் இதுகுறித்து ஆடிட்டர் சதீஸ்குமாரிடம் கேட்டோம். 




``பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி இரண்டு ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள். இரண்டையும் இணைத்தால்தான் வருமான வரித்தாக்கலின்போது இ-வெரிஃபிகேஷன் செய்ய முடியும். இ-வெரிஃபிகேஷன் செய்வது கட்டாயமான ஒரு நடைமுறை. அதேபோல, ஆதாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணும் வருமான வரித்துறைக்குக் கொடுத்துள்ள செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும். 



அதை முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டும். காலக்கெடுவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நீட்டித்ததைப்போல இம்முறையும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பான் கார்டு செல்லாமல் போகாது என நம்புகிறேன்." என்றார்.

No comments:

Post a Comment

Please Comment