கூட்டுறவு சங்கங்கள் இளநிலை ஆய்வாளர் பதவி: ஏப் 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் 25 முதல் மே 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் இளநிலை ஆய்வாளர் பதவி: ஏப் 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
No comments:
Post a Comment
Please Comment