மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! 



மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! புதுடெல்லி : தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது. இதேபோல் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கும், அங்கு காலியாக இருக்கும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 



மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! 



தமிழகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 822 பேர் போட்டியிடுகிறார் கள். 18 சட்டசபை தொகுதிகளில் 269 பேர் போட்டியிடுகிறார்கள். மாநிலம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 



வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்குச்சாவடிக்குள் சென்று ஓட்டுப் போட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். 



மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! 


 முதல் முறையாக ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது. சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்கப் பட்டது. மாநிலம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 



இந்நிலையில் தமிழகத்தில் நடந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவானது. மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.34% வாக்குகளும் பதிவானது. 18 தொகுதி இடைத்தேர்தலில் 75.56% வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 4,02,4784 வாக்காளர்களில் 2,07,27179 ஆண் வாக்காளர்களும், 2,12,96722 பெண் வாக்காளர்களும், 1066 திருநங்கைகளும் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

No comments:

Post a Comment

Please Comment