72 ஆண்டுகளுக்கு பின் சாதித்துக்காட்டிய பள்ளி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

72 ஆண்டுகளுக்கு பின் சாதித்துக்காட்டிய பள்ளி

72 ஆண்டுகளுக்கு பின் சாதித்துக்காட்டிய பள்ளிதொண்டாமுத்துார் 




வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் புதிய சாதனை படைத்துள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. கடந்தாண்டை காட்டிலும், தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும், கிராமப்புற அரசு பள்ளிகள் புதிய சாதனை படைத்துள்ளன. கடந்தாண்டு, 99 சதவீதம் பெற்றிருந்த, தொண்டாமுத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்தாண்டு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.




மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்தாண்டு, 63 சதவீதமே தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் கடைசி இடத்தில் இருந்தது. ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் இந்தாண்டு, 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1947 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றதில்லை. 72 ஆண்டுகளுக்கு பின், 100 சதவீத தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

72 ஆண்டுகளுக்கு பின் சாதித்துக்காட்டிய பள்ளிதொண்டாமுத்துார் 

No comments:

Post a Comment

Please Comment