மின்னணு ஓட்டுப்பதிவு இருந்தாலும் ஓட்டுச்சீட்டு அச்சடிச்சு தான் ஆகணும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மின்னணு ஓட்டுப்பதிவு இருந்தாலும் ஓட்டுச்சீட்டு அச்சடிச்சு தான் ஆகணும்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்த பின், ஓட்டுச்சீட்டு நடைமுறை போய்விட்டது. ஆனாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்காக, 'பேலட் ஷீட்' அச்சடிக்க வேண்டியிருக்கிறது. 




வரிசை எண், வேட்பாளர் பெயர், போட்டோ மற்றும் சின்னத்துடன் கூடியதாக, 'பேலட் ஷீட்' இருக்கும்.தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ம் தேதி, தேர்தல் நடக்க உள்ளது. 779 ஆண்கள், 65 பெண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம், 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இவர்களில், அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சி வேட்பாளர்கள், 57 பேர்; அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள், 55 பேர்; பதிவு பெற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், 174 பேர்; சுயேச்சை வேட்பாளர்கள், 559 பேர்.கடந்த, 29ம் தேதி, தகுதியான வேட்பாளர்கள் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்பட்டது. 



இதைத் தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளுக்குரிய வேட்பாளர் விபரம், 'படிவம் 7' மூலம், சென்னையில் உள்ள, மாநில தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.'படிவம் - 7' விபரங் களை, அங்குள்ள குழுவினர், சரிபார்த்து ஒப்புதல் அளித்து உள்ளனர். அரசு அச்சகங்களுக்கு, 'பேலட் ஷீட்' அச்சடிக்க, ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 




பார்வையற்ற வாக்காளர்களுக்காக, 'பிரெய்லி ஷீட்'டும் தயாரிக்கப்படுகிறது.ஓட்டுப்பதிவுக்கு சில நாட்கள் முன்னதாக, 'பேலட் ஷீட்'கள், சென்னையில் இருந்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், இவை கொண்டு வரப்படும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையை, காட்டிலும், 10 சதவீதம் கூடுதலாக, 'பேலட் ஷீட்'கள் அச்சிடப்படும். கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் ஷீட்' பொருத்தி, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்தப்படும்.முன்னதாக, பேலட் ஷீட்டை, தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பமிட்டு வழங்குவார். 




பேலட் யூனிட்டில் உள்ள கண்ணாடி கதவை திறந்து, பேலட் ஷீட்டை வைத்து, பின்புறமாக நுால் கயிற்றில் பிணைத்து, 'டேக்' வைத்து, சீலிடப்படும். அப்போது, கன்ட்ரோல் யூனிட்டில் இருந்த பழைய பேட்டரி கழற்றப்பட்டு, புதியவை பொருத்தப் படும்.ஒயர்களை இணைத்து பார்த்து, சரியாக ஓட்டுப்பதிவு நடக்கிறதா என்பது, மாதிரி ஓட்டுப்பதிவின் மூலம் உறுதி செய்யப்படும். பேலட் ஷீட் பொருத்தியதும், 



மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளன்று, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

No comments:

Post a Comment

Please Comment