மருத்துவ பட்டமேற்படிப்பு: நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மருத்துவ பட்டமேற்படிப்பு: நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

மருத்துவ பட்டமேற்படிப்பு: நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு



முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 181 இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 





அதில், மொத்தம் 999 மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 882 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. தனியார் கல்லூரிகளில் 117 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை போக மீதமுள்ள இடங்களுக்கும், அனுமதிக் கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களுக்கும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு பின்னர் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது

மருத்துவ பட்டமேற்படிப்பு: நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு



No comments:

Post a Comment

Please Comment