வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி

சுவையான மசாலா மோர் செய்வது எப்படி? கோடைகாலம் தொடங்கினாலே நாம் அதிகமாக வெயிலுக்கு இதமான, குளிர்ச்சியான பானங்களை தான் குடிக்க வேண்டும் என்று விரும்புவோம். தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  



தேவையானவை 

கட்டித்தயிர் - 1 கப் 

புதினா - 2 அல்லது 3 

இஞ்சி - சிறு துண்டு 

பச்சைமிளகாய் - 1 

தண்ணீர் - 2 கப் 

சாத் மசாலா - ஒரு சிட்டிகை சீரகத்தூள் - 

ஒரு சிட்டிகை உப்பு - சிறிதளவு 



செய்முறை முதலில் தயிரை மிக்சியில் ஊற்றி, அதனுடன் புதினா, இஞ்சி, பச்சைமிளகாய், சாட் மசாலா, சீரகத் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கியூப் போட்டு பருக நன்கு குளிர்ச்சியாக இருக்கும். பயன்கள் இதில் புதினா அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம். புதினாவின் வைட்டமின் சி உள்ளதால், உடலுக்கு உற்சாகமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.



 வெயிலில் நாம் வெயிலில் வெளியில் செல்லும் போது, நம் உடம்பிலுள்ள உப்பு சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. அந்த உப்பினை இந்த மோரில் சேர்க்கக் கூடிய உப்பு ஈடு செய்து விடும்.

No comments:

Post a Comment

Please Comment