இம்மாத இறுதிக்குள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இம்மாத இறுதிக்குள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்

இம்மாத இறுதிக்குள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்




ஓய்வூதியம் பெற்று வரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் ஆயுள் சான்றுகளை கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவகத்தில் அளிக்க்க வேண்டும் என உதவி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் ( சமூக பாதுகாப்பு திட்டம்) கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,கோவை தொழிலாளர் உதவி ஆணையர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு அமைப்புசாரா தொழிலாளர்களில் ஆயுள் சான்று அளிக்காமல் உள்ள ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தங்களது தற்போதைய புகைப்பட நகல் 2, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் நகல் ஆவணங்களை கோவை ராமநாதபுரம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இயங்கிவரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவகதிற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.




இம்மாத இறுதிக்குள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment

Please Comment