நான்கு தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நான்கு தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

நான்கு தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 



முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், வேதியியலர் - இளநிலை வேதியியலர் காலிப் பணியிடத்துக்கு வரும் 20-ஆம் தேதியும், உதவிப் புவியியலர்-புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் 21-ஆம் தேதியும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 






இந்த நிலையில், தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு மே 11-ஆம் தேதியும், இதர பணியிடங்களுக்கு மே 5-ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் இடங்களில் எந்த மாற்றமும் இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment