தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணிச்சான்று மூலம் வாக்களிக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணிச்சான்று மூலம் வாக்களிக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திற்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மணிமேகலை, பொதுச்செயலாளர் மயில், மாநிலப்பொருளாளர் ஜோதிபாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: 





தமிழகத்தில் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்களுக்கே தங்கள் வாக்கைச் செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது என்பது திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 24, 31ம் தேதி ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குக்கோரி படிவம் 12-ல் விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் பெரும்பாலோருக்கு நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை. 






 மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சொந்த நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் தேர்தல் பணியாளர்கள் முதல் பயிற்சி வகுப்பில் படிவம் 12 ஏ-ல் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தபால் வாக்குகள் மூலமாகவோ அல்லது தேர்தல் பணிச்சான்று மூலமாகவோ தங்கள் வாக்கைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment