பி.காம் படிப்புக்கு இருக்கு... வற்றாத வேலை வாய்ப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பி.காம் படிப்புக்கு இருக்கு... வற்றாத வேலை வாய்ப்பு!

பி.காம்., படித்து முடித்து, பட்டமேற்படிப்பை முடிப்பவர்களுக்கு, அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.பி.காம்., படித்ததும், எம்.காம்., முடித்து பி.எட்., அல்லது பி.எச்டி., முடித்து ஆசிரியர் பணிக்கு கூட செல்லலாம். நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், மார்க்கெட்டிங் என அனைத்து துறைகளிலும் பணிபுரியலாம்.



கம்ப்யூட்டர் துறை சார்ந்த, பணி வாய்ப்புக்கு முயற்சி மேற்கொள்பவர்கள், எம்.சி.ஏ., பட்ட மேற்படிப்பை, தயக்கமின்றிதேர்வு செய்து படிக்கலாம். ஐ.டி., நிறுவனங்கள், பி.காம்., படித்த மாணவர்களுக்கு, உரிய பயிற்சி வழங்கி பணியமர்த்தி கொள்கின்றன.கூடுதல் மொழி...கூடுதல் பலம்இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட பிற நாட்டு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, உலக வங்கிகளிலும் வேலை கிடைக்கும். இப்படிப்பை படிக்கும் மாணவர்கள், அடிப்படை தொழில்நுட்பம், ஜி.எஸ்.டி., போன்ற தேவைகளின் அடிப்படையில், கூடுதல் சான்றிதழ் படிப்புகளை முடிப்பது, நல்ல வாய்ப்புகளை பெற்றுத்தரும்.பிளஸ்2 பிரிவில், கணக்கு பதிவியல், வணிகவியல் பாடம் படித்த மாணவர்கள், இதில் சேரலாம். 



அனைத்து கலை அறிவியல் கல்லுாரிகளிலும், இப்பாடப்பிரிவுகள் உள்ளன.பொது பி.காம் நல்லதுபி.காம்., என்ற பிரிவுகளின் கீழ், பி.காம்., சி.ஏ., பி.காம்., பேங்கிங் அனலிடிக்ஸ், பி.காம்., பினான்சியல் சிஸ்டம், பி.காம்., பாரின் டிரேட், பி.காம் ரீட்டெயில் மார்க்கெட்டிங் உட்பட 20க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன.அரசு கல்லுாரி வணிகவியல் துறைத்தலைவர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், துறைகள் எதுவாயினும், பி.காம்., படித்த மாணவர்களுக்கு, கட்டாயம் வேலைவாய்ப்பு உண்டு. 




பி.காம்., சிறப்பு பிரிவுகளை காட்டிலும், பொது பி.காம்., படிப்புக்கு முன்னுரிமை கொடுக்கலாம். அரசு கல்லுாரியை பொறுத்தவரையில், தொழிற்படிப்புகள் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்திக்கொண்டால், நிச்சயம் சிறப்பான எதிர்காலம் உண்டு,'' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment