தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழையிருந்தால் திருத்தலாம்: முதன்மைக் கல்வி அலுவலர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழையிருந்தால் திருத்தலாம்: முதன்மைக் கல்வி அலுவலர்

தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழையிருந்தால் திருத்தலாம்: 



முதன்மைக் கல்வி அலுவலர் தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழையிருந்தால் திருத்தலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். 




கடலூர் மாவட்டத்திலிருந்து 30,015 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இந்த நிலையில், கடந்த 19- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. 26,548 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்வானவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்க ஏதுவாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். 




இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது: தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர், மதிப்பெண், கூட்டுத் தொகை, பிறந்த தேதி போன்றவற்றில் பிழையிருந்தால் உடனடியாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிப்பர். இதன் மூலம் பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 



தனியார் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் மட்டுமே நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்கலாம். எனினும், சில பள்ளிகளில் வழக்கமான பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. அதன்படி, பாசார், விருத்தாசலத்திலுள்ள தனியார் பள்ளியில் விசாரணை நடத்தி உள்ளோம். 


தற்காலிக மதிப்பெண் பட்டியலில் பிழையிருந்தால் திருத்தலாம்:  

நிகழ் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பயோ - மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு பயன்பாட்டுக்கு வந்துவிடும். 264 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 6 பள்ளிகள் மட்டுமே தொடர் அனுமதியைப் பெறவில்லை. எனினும், அவர்கள் அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

Please Comment