சம்மர் கேம்ப் அனுப்பும் பெற்றோர்களின் கவனத்துக்கு... #SurveyResult - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சம்மர் கேம்ப் அனுப்பும் பெற்றோர்களின் கவனத்துக்கு... #SurveyResult

சம்மர் கேம்ப் அனுப்பும் பெற்றோர்களின் கவனத்துக்கு... #SurveyResult




கோடை வருவதற்குமுன்பே சம்மர் கேம்ப் விளம்பரங்கள் வந்துவிடும். அந்தளவுக்கு, பெற்றோர்கள் சம்மர் கேம்ப்க்கு பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கலை, விளையாட்டு, மொழி, கிராஃப்ட் எனப் பல்துறை சார்ந்தவற்றைக் கற்றுக்கொள்ளும் விதமான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதன் மூலம், பிள்ளைகளின் விடுமுறை தினங்கள் பயனுள்ளதாக மாறுகின்றன என்றும் கருதுகின்றனர். விகடன் இணையதளத்தில் சம்மர் கேம்ப்க்கு அனுப்ப விரும்பும் பெற்றோர்களிடம் சர்வே ஒன்றை நடத்தினோம். 



பலரும் ஆர்வத்துடன் சர்வேயில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நன்றி. அந்த சர்வே முடிவுகள் இதோ: 2-3 வயதுக்குள் 8.8 சதவிகிதமும், 4 - 6 வயதுக்குள் 35.3 சதவிகிதமும், 7-10 வயதுக்குள் 35.3 சதவிகிதமும், 11-15 வயதுக்குள் 20.6 சதவிகிதமும் கொண்ட பெற்றோர் கலந்துகொண்டுள்ளனர். 



உங்கள் பிள்ளையை சம்மர் க்ளாஸூக்கு அனுப்புவீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்று 22.1 சதவிகிதத்தினரும், இல்லை என்று 77.9 சதவிகிதத்தினரும் சொல்லியுள்ளனர். 


 பாட்டு வகுப்புக்கு 5.9 சதவிகிதத்தினரும், 

ஓவியம் கற்க, 8.6 சதவிகிதத்தினரும், 

நீச்சல் பழக, 5.9 சதவிகிதத்தினரும், 

கம்ப்யூட்டர் கற்க 3.9 சதவிகிதத்தினரும், 

மொழியைக் கற்க 5.5, சதவிகிதத்தினரும், 

கிராஃப்ட் பழக 3.1 சதவிகிதத்தினரும் 

மற்ற பிரிவில் கற்க 19.7 சதவிகிதத்தினரும் சென்ற வருடம் கிளாஸூக்கு அனுப்பவில்லை என்று 47.4 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். 



 சென்ற ஆண்டு கிளாஸூக்கு அனுப்பவில்லை என்று 53.7 சதவிகிதத்தினரும், 1000க்குள் என்று 25 சதவிகிதத்தினரும், 1001 - 2000 க்குள் என்று 6.6 சதவிகிதத்தினரும் 2001 - 3000 க்குள் என்று 4.4 சதவிகிதத்தினரும், 3000 க்கு மேல் என்று 10.3 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 



 ஆம் என்று 72.8 சதவிகிதத்தினரும், இல்லை என்று 27.2 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். பாட்டு வகுப்புக்கு 4.2 சதவிகிதத்தினரும், ஓவியம் கற்க, 13.8 சதவிகிதத்தினரும், நீச்சல் பழக, 26.7 சதவிகிதத்தினரும், கம்ப்யூட்டர் கற்க 2.9 சதவிகிதத்தினரும், மொழியைக் கற்க 8.2 சதவிகிதத்தினரும், விளையாட்டு ஒன்றைப் பழக 18.5சதவிகிதத்தினரும், கிராப்ஃப் பழக 7.2 சதவிகிதத்தினரும் மற்ற பிரிவில் கற்க 18.5 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். 1000க்குள் என்று 35.3 சதவிகிதத்தினரும், 1001 - 2000 க்குள் என்று 21.3 சதவிகிதத்தினரும் 2001 - 3000 க்குள் என்று 23.5 சதவிகிதத்தினரும், 3000 க்கு மேல் என்று 19.9 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். 



 பிள்ளைகளை, சம்மர் கேம்ப் அனுப்பும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் எவையெனக் கூறுகிறார் ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சார்ந்தவருமான பாண்டியராஜன். ``முதலில், சம்மர் கேம்ப் வகுப்பில் என்னென்ன பயிற்சிகள் இருக்கின்றன என்பதை, பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பிரிவிலும் என்ன விதமான பயிற்சிகள் அளிக்கப்படும் என உரையாட வேண்டும் . எந்தப் பயிற்சி என்பதைத் தேர்ந்தெடுப்பதில், பிள்ளைகளின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் அந்தப் பயிற்சியை ஆர்வத்துடன் எதிர்கொள்வார் . தேர்ந்தெடுக்கும் பயிற்சிக்கும், உங்கள் பிள்ளை தயாராக இருக்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டும் . 



மிக குறைந்த வயதுள்ள குழந்தைகளுக்கு அதிகமான வயதுக்கான பயிற்சியைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் . பயிற்சி அளிக்கும் நிறுவனம் எத்தகையது என்பதை விசாரிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் , சேவைக்காகப் பயிற்சி வகுப்புகளை நடத்தும் நிறுவனம் எனில், பயிற்சியின்போது சுமை தராது. ஆனால், முழுக்க வணிகம் மட்டுமே நோக்கம் கொண்ட நிறுவனம் எனில், செலவு அதிகமாவதுடன், பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தையும் அளிக்கக்கூடும். மொழிப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தால், ஒரு மாதத்தில் முழுமையாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அந்த மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை அளித்துவிட முடியும். இந்தப் புரிதல் பெற்றோர்க்கு அவசியம். ஏனெனில் , பயிற்சி முடிந்த பிறகு, அந்த மொழியில் எழுதவில்லை; பேசவில்லை என்று புகார் கூறக் கூடாது அல்லவா ! பயிற்சிக்குப் பிள்ளைகளை அனுப்பும் முன், பயிற்சி நடைபெறும் இடத்தை ஒருமுறை நேரில் சென்று பார்த்து வருவது நல்லது. ஏனெனில், பிள்ளைகளின் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்கிறதா? 



அங்கு செல்லும் வழியில் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் .. உள்ளிட்டவற்றைத் திட்டமிடுவதற்கு உதவும். குழந்தைகள் விடுமுறைக் காலத்தில் பயனுள்ள ஒன்றைப் பழகவிருக்கிறார்கள். அதனால், அது பள்ளிக்குச் செல்லும் சூழலைப் போல அமைந்துவிடக் கூடாது. பயிற்சியின் தன்மை இலகுவானதாக இருக்கும்படியான வகுப்புகளுக்கு அனுப்புவது அவசியம் . எல்லாவற்றையும் விட, குழந்தைகள் மகிழ்ச்சியோடு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 




அப்போதுதான் குறுகிய காலத்தில் தரப்படும் பயிற்சியைக் கற்க முடியும். மேலும், அந்த நாள்களில் மகிழ்ச்சியோடும் இருக்க முடியும். அப்படியான சூழல் இருக்கும்பட்சத்தில்தான் பயிற்சியில் பழகியவற்றை, பயிற்சி முடிந்தும் தொடர்வார்கள். உதாரணமாக, ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்ளச் செல்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், பள்ளி செல்லும் நாளிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகும் பழக்கத்தைத் தொடர்வார்கள். அழுத்தம் நிறைந்த பயிற்சியாக இருந்தால், அந்தப் பயிற்சி வகுப்பு முடிவடைந்ததுமே கற்றுக்கொண்டதை ஓர் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

No comments:

Post a Comment

Please Comment