அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இணையதளம் மூலம் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்ககலாம்.
8 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐடிஐகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிடுதல் வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஐகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பம், ரூ.50-க்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்து சீட்டு மூலம் செலுத்தும் விதம் மற்றும் விளக்ககுறிப் பேட்டை இணையதளவசதி உள்ள இடங்களில் இருந்தும், அரசு இ-சேவை மையங்களில் இருந்தும் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
No comments:
Post a Comment
Please Comment