"குடி, குடியை கெடுக்கும்" மதுப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை பார்ப்போமா!
>
Alcohol addiction Problems :
மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:
▪ உலக முழுவதிலும் கோடிக்கணக்கான 'குடி'மக்கள் மரணத்தை நோக்கியே பயணிக்கிறார்கள். அளவுக்கு மீறி குடிப்பதால் முதலாவதாக ஆபத்தான நிலையைச் சந்திக்க நேரிடுகிறது.
▪ எல்லா மதுபானங்களிலும் இருக்கிற எத்தனால் என்ற இரசாயன சேர்மம் ஒரு நியூரோடாக்ஸின் ஆகும்.
இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்துவிடுகிற அல்லது அழித்துவிடுகிற அளவுக்கு சக்திபடைத்தது. உடலுக்குள் அதிகளவு எத்தனால் செல்லும்போது 'கோமா' நிலையும், கடைசியில் மரணமும் ஏற்படுகிறது.
▪ கல்லீரலில் பாதிப்பு கல்லீரலை வீங்கச் செய்யும் கல்லீரலை நிரந்தரமாக சேதம் அடைய செய்யும்.
கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் ஆகியவற்றிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது.
▪ மயக்கத்தில் ஆழ்த்துதல்
அதிகமாக மது அருந்துவதால் மயக்கம் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி இருக்கும்.
▪ அளவுக்கு மீறி மதுபானம் குடிப்பதால், மூளையில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதோடு செல்கள் சிதைந்து அழிந்து மூளையின் உருவே மாறிவிடுகிறது.
'கிராமத்து சிறுவர்களின் ஆப்பிள்' என்று போற்றப்படும் கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்களை பார்ப்போமா?
உங்களின் முடிவுகள், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது. எனவே விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது.
▪ பசி இழப்பு:
இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது.
▪ கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் குடிக்கும்போது அவளுடைய கருவில் வளரும் சிசுவும் குடிக்கிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூளைக் கோளாறு, மொழிக் கோளாறு, செவிக் கோளாறு, பார்வைக் கோளாறு, நடத்தை கோளாறு, சரீர மற்றும் மன வளர்ச்சி கோளாறு, அளவுக்கு அதிகமான சுட்டித்தனம் ஆகியவற்றுடன் போராட வேண்டியிருக்கிறது.
thulirkalvi

No comments:
Post a Comment
Please Comment