'சென்டாக்' உதவி மையங்களில் குறைபாடு, இண்டர்நெட் சென்டர்களை நாடும் மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'சென்டாக்' உதவி மையங்களில் குறைபாடு, இண்டர்நெட் சென்டர்களை நாடும் மாணவர்கள்

'சென்டாக்' உதவி மையங்களில் குறைபாடு, இண்டர்நெட் சென்டர்களை நாடும் மாணவர்கள்




புதுச்சேரியில் பொறியியல், கலை- அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, பள்ளி, கல்லுாரிகளில் அமைக்கப்பட்ட உதவி மையங்களில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக, மாணவர்கள் தனியார் இண்டர்நெட் சென்டர்களையே நாடி வருகின்றனர்.புதுச்சேரியில் இந்தாண்டு பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது, நேற்று முன்தினம் துவங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ, கல்லுாரி, பள்ளிகளில், 'சென்டாக்' சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




துவக்க நாளில், உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் பலரும் பெற்றோருடன் குவிந்தனர். பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, தாகூர் கலை கல்லுாரி உள்ளிட்ட மையங்களில் சென்டாக் இணையதளம் பல மணி நேரம் செயல்படாததால், மாணவர்கள் சிரமப்பட்டனர்.அதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் நேற்று உதவி மையங்களில் பணியில் இருந்தனர். 




இருந்தபோதும், இணையதள வேகம் குறைவு, சில மையங்களில், உதாரணமாக, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், ஒரு கணினியை வைத்துக் கொண்டு, இரு வல்லுநர்கள் செயல்பட்டதால், ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவே, அரை மணி நேரமாகும் சூழல் நிலவியது. இதனால், மாணவர்கள், பெற்றோர் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.




சில மையங்களில் கூடுதல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி, சான்றிதழ்களை ஸ்கேன் செய்யும் மிஷின்கள் இருந்த போதிலும், இணையதள வேகம் குறைவாக இருந்ததால் சிரமம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர், தனியார் இண்டர்நெட் சென்டர்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.சென்டாக் உதவி மையங்களில் மாணவர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், விண்ணப்பிப்பது தொடர்பாக ஆலோசனை மட்டுமே பெற்றுச் சென்றனர்.




'சென்டாக்' உதவி மையங்களில் குறைபாடு, இண்டர்நெட் சென்டர்களை நாடும் மாணவர்கள்

No comments:

Post a Comment

Please Comment