மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது

மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது







நீலகிரி மாவட்டத்தில் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கூடாது என மாவட்ட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளதாவது, ''நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரத்துடன் பள்ளி செயல்பட வேண்டும். ஆனால் மாவட்டத்தில் 34 பள்ளிகள் துவக்க அனுமதியின்றியும், தொடர் அங்கீகாரமின்றியும் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 




எனவே அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்கவேண்டாம். இதை மீறி மாணவர்கள் ேசர்க்கை நடந்தால் எந்த விதத்திலும் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது. இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பற்றி நேற்று தகவல் வெளியிடப்பட்டது. ஊட்டி ஓன்றியம்: ஊட்டி ரெக்ஸ் இளம் மழலையர் பள்ளி, மஞ்சூர் சிஸ்டர் அல்போன்சா இளம் மழலையர் பள்ளி, ஊட்டி நசரெத் கான்வென்ட் இளம் மழலையர் பள்ளி, ஊட்டி வுட்சைடு சி.பி.எஸ்.சி.,இளம் மழலையர் பள்ளி, பிங்கர்போஸ்ட் ஸ்டார் பிரேசைடு இளம் மழலையர் பள்ளி, 







கப்பத்தொரை பிரைசைடு இளம் மழலையர் பள்ளி, ஊட்டி ஜே.எஸ்.எஸ்., சி.பி.எஸ்.சி., இளம் மழலையர் பள்ளி, ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் இளம் மழலையர் பள்ளி, சேரிங்கிராஸ் ஆர்.டி.ஒ., ஆபிஸ் பின்புறம் உள்ள புளூம்மிங் பட்ஸ் இளம் மழலையர் பள்ளி, எச்.பி.எப்., இந்துநகர், வள்ளுவர்நகர் கிட்ஸ் ஆர் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கமர்சியல் சாலை, லிபர்ட்டி தியேட்டர் பேண்ட்லைன் பகுதியில் உள்ள மவுண்ட் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, ஊட்டி நிசாம் இளம் மழலையர் பள்ளி, நிசாம் சி.பி.எஸ்.சி., இளம் மழலையர் பள்ளி ஆகிய பள்ளிகள் எல்கேஜி., யுகேஜி., அங்கீகாரம் பெறப்படவில்லை. 




ஊட்டி கெட்ஜி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, ஊட்டி புரூக்லின் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, ஊட்டி லிட்டில் கிங்ஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, ஊட்டி கூடலூர் சாலை, பிளாக் வுட் இன்பென்ட் ஜீசஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, நடுவட்டம் மேட்டுசேரி பார்ன் செக்கர்ஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகள் எல்கேஜி., முதல் 5ம் வகுப்பு வரையிலும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகின்றன.







அதேபோல் குன்னூர் ஒன்றியத்தில் குன்னூர் புனித ேடாம்னிக் இளம் மழலையர் மற்றும் மழலையர் பள்ளி, ஆங்கூர் வித்யா மந்திர் இளம் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, குன்னூர் எம்ஆர்சி., இளம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, குன்னூர் சின்ன வண்டிசோலை கிட்ஸி இளம் மழலையர் பள்ளி ஆகிய பள்ளிகள் எல்கேஜி., யுகேஜி., அங்கீகாரம் பெறப்படவில்லை. 




நேசனல் மாடல் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, பெர்ன்ஹில் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, வெலிங்டன் கன்டோன்மென்ட் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, குன்னூர் இயர்லி ஸ்டெப்பிங் ஸ்டோன் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, குன்னூர் கிங்ஸ்வே மழலையர் மற்றும் துவக்க பள்ளி ஆகிய எல்கேஜி., முதல் 5ம் வகுப்பு வரை அங்கீகாரம் பெறவில்லை. கோத்தகிரி ஒன்றியத்தில் மிளிதேன் நேஷனல் மாடல் இளம் மழலையர் பள்ளி எல்கேஜி., யுேகஜி., அங்கீகாரம் பெறப்படவில்லை. 




அம்மா கிட்ஸ் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, சி.எஸ்.ஐ., வெஸ்லி மழலையர் மற்றம் துவக்க பள்ளி ஆகியவை எல்கேஜி., முதல் 5ம் வகுப்பு வரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகிறது. கூடலூர் ஒன்றியத்தில் பக்குள் மை ஷூ இளம் மழலையர் பள்ளி எல்கேஜி., யுகேஜி., அங்கீகாரம் பெறப்படவில்லை. செயின்ட் ஜார்ஜ் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, கிரையோன்ஸ் மழலையர் மற்றும் துவக்க பள்ளி, ஜி.பி.எஸ்., மழலையர் மற்றும் துவக்க பள்ளி ஆகியவை எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 34 பள்ளிகள் உரிய அங்கீகாரமின்றி செல்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.







மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது

No comments:

Post a Comment

Please Comment